இட ஒதுக்கீடு எனது பார்வையில் – My Thoughts on Reservations

written on April 30, 2011 in தமிழ்ப் பதிவு and My Articles and Religion with no comments

(For English translation see end of this Post)
இக்கட்டுரையை எழுதுவதற்கு பல முறை யோசித்தும், எழுதாமல், விட்டுவிட்டேன். சில நாட்களுக்கு முன் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடைப்பற்றி சில நண்பர்களுடன் பேச நேர்ந்தது. எல்லோருமே அது தவறு என்றே கூறினர். இதில் வேடிக்கை என்ன வென்றால், கூறிய எவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அல்லர். அவர்களுக்கு சத்தியமாக தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறப்பதென்பது எவ்வளவு கடினமானது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதற்கு முன், நான் ஒரு கிறித்தவன். எனக்கு கிறித்தவன் என்பதினால் இந்திய அரசின் எந்த ஒரு இட ஒதுக்கீட்டிற்கும், தகுதியற்றவன் என்பதை தெளிவுபடுத்த விழைகின்றேன் (கீழே விளக்கம் உள்ளது).

எல்லோருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவரின் கல்வி செலவு மிக மிக குறைவானது என்பதனையே திரும்பத் திரும்பக் கூறினர். அவர்களுக்கு எதனால் இப்படி ஆனது என்பது குறித்து கவலை இருப்பதாக தோன்றவில்லை.

வெளிப்படையில் சாதி என்பது இந்திய சமுதாய சூழலில் இருப்பதாக தெரியவில்லை எனினும். இன்றளவும் கூட, சாதிக்குள்ளேயே திருமணம் என்பதே எழுதாத சட்டமாக இருக்கின்றது. வெளிசாதிக்காரன் வீட்டினும் நுழைந்ததால் வீட்டை கழுவிட்ட நண்பனின் (படித்த) தாயை பார்த்த போதும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பைப் பற்றி தரம் குறைவாக என்னிடமே பேசிய மற்றோரு நண்பனானாலும் சரி, சாதீயம் இன்னும் இந்தியாவை விடவில்லை என்பதே இது உணர்த்துகின்றது.

சாதி என்பது இந்தியாவை பிடித்திருக்குமொரு நோய். மத தலைவர்களால் சாதீயம் அங்கிகரிக்கப்படும் வரை அதற்கு தீர்வு காண்பதென்பது மிக மிக கடினம். அதுவரை இட ஒதுக்கீடு அவசியம்.

Creamy layer-கூத்து :

எதையாவது கிளப்பி விட்டு, இருக்கறவனைக் குழப்பி அவர்களுக்குள் பிரிவினை இருந்து கொண்டே இருப்பதற்காகச் செய்யப்படும் Hy-tech சதி தான் Creamy layer பேச்சு எல்லாம்.

தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர் பணக்காரர் ஆகி விட்டால் கோவில் கருவறைக்குள் விட்டு விடுவார்களா? ஒரு பிராமணர் இல்லத்தில் திருமணம் நடத்தி வைக்க அனுமதித்து விடுவார்களா? சங்கராச்சாரியார் கையைத் தொட (ஆணாக இருந்தாலும்) அனுமதிப்பார்களா? தமிழகத்தின் முக்கிய கோவில்களின் குருக்கள் பட்டர்களில் பெரும்பாலோர் கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள் (அதிலே எனக்கு எந்தப் பொறாமையும் இல்லை ஐயா, சொல்லிக் கொள்கிறேன்) என்பதால் ஏழைப் பிராமணனுக்கு மட்டுமே கருவறைப் பணி என்று விட்டுக் கொடுப்பார்களா?முயல்

சிறு பான்மையினரின் இடஒதுக்கீடு

இத்தகயோரின் இன்னுமோர் வயத்தெரிச்சல், சிறுபாண்மையினரின் கல்வி நிலயங்களில், அதிலும் குறிப்பாக கிறித்தவ சிறுபாண்மையினரின் கல்வி நிலயங்களில், கிறிஸ்தவர்களுக்கு முன்னுறிமை கொடுக்கப்படுவது.

என்னோடு முதுகளை பயிலும் (கிறித்தவர் அல்லாத) ஒருவருக்கு கூட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கிறித்தவராயிருப்பின் எந்த சலுகையும் கிடையாது என்பதோ மிஸ்ரா கமிஷன் அறிக்கையை பற்றியோ தெரியவில்லை என்பது வருந்தத் தக்கது. இந்திய அரசியல் சட்டத்திலேயே, கிறித்துவை கடவுளாக கொண்டிருக்கும் ஒரே குற்றத்திற்காக எல்லா சலுகைகலும் மறுக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?

காண்: Constitution of India (SCHEDULED CASTES) ORDER, [1950]1 (C.O.19):
no person who professes a religion different from the Hindu 5[, the Sikh or the Buddhist] religion shall be deemed to be a member of a Scheduled Caste.

இந்த சட்டத்தை ஆதரிக்கும் சிலர், பிரிட்டிஷ் காலத்தில் கிறித்தவத்திற்கு மதம் மாறினவர்கலுக்கு பிரிட்டிஷ் அரசு சலுகைகள் வழங்கியதால் இவாறு இருப்பதாக கூறுகின்ரனர். ஆனால் இப்போது மதம் மாறுபவகளுக்கு யார் எந்த சலுகைகளை தருகின்றார்?

இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை சிறுபாண்மையினரின் கல்வி நிலயங்களில் பாரபட்சம் பார்க்கப்படும். பார்க்கப்பட வேண்டும்.

இருதியாக இடஒதிக்கீட்டை மாற்றியமைக்க எழும்பும் குறலொலி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரிடமிருந்துதான் வரவேண்டும். உயர் சாதியில் பிறந்தவரிடமிருந்து வருவது நகைப்புக்குளானது.English Translation of The Above Text

I have thought about writing this many times, but decided against it. Few days before I had a chat with my friends about caste based reservation in the India Constitution. Every single one of my friends apposed it. The funny fact was none of them were from scheduled caste or tribe. So, I don’t think they know how hard it is to be born in a scheduled caste family.

Before going any further I would like to clarify that I am Christian, so I as per Indian Constitution am not eligible for any quota/reservation. (I have explained ‘why’ later in this article)

One of their major problem my friends had was that they are paying more than the SC and ST students. It is a shame that PG students don’t give a dime about why it is so.

At an overall outlook, it seems that there is no caste-ism in India. But even today it is an unwritten law of the land that prohibits inter caste marriage. Families whose children do so, are usually disowned by others. I have myself seen an educated mother of my friend wash her house because a low caste friend of her son entered her house. Or in another case my dear friend talked low of those caste people right before me. These and many similar situation shows that caste-ism is still deeply rooted in India.

Caste-ism is a disease. There is no second thought about it. As long as this disease is supported by religious leaders, it is very very hard to find a solution for that. Until then reservations are a necessity in India.

The joke of Creamy layer :

Some people say that if a low caste people earn a lot, they must be cut of from reservation. It is now even enacted into law. But…

Just because a low caste person becomes rich, will you allow him to enter the sanctum sanctorum of a Hindu temple? Will he be allowed to be a priest in a Brahmin’s wedding? Will they allow him to meet or even touch the hands of sankarachariyar? Most Brahmin’s in Tamil Nadu are rich by serving as temple priests. will they give up their post to another poor brahmin just because they are rich?Muyal (Translated by me)

Reservations In minority Institutions

One more thing which is not tolerable by these anti-reservation group is the special priority given in minority institutions for their people, especially in christian educational institutions for Christians.

Not even a single non christian classmate of mine has a vague knowledge that just believing in Christ and becoming a christian, a Hindu SC will loose all his prior faculties he enjoyed (including reservation) from the government of India. Neither do they have any knowledge of Missra Commission report. It looks like every christian in India is punished for believing Christ is god. Do you think this is correct?

Refer: Constitution of India (SCHEDULED CASTES) ORDER, [1950]1 (C.O.19):
No person who professes a religion different from the Hindu 5[, the Sikh or the Buddhist] religion shall be deemed to be a member of a Scheduled Caste. (source)

Now, the people who defend this says that during British rule, people who converted to Christianity enjoyed extra privileges. But what about people who are converting now? They don’t enjoy any benefits! What do you have to say for them?

As long as this sentence remains in the Indian Constitution. Indian is not a secular country and minority Institutions will and should show partiality in admission.

Last but not the least, any voice against reservation should come from SC or an ST people. Not from people who consider themselves to be in the top of social structure.