இந்தியாவின் மதச்சார்பின்மை எனும் முகமூடி

written on November 6, 2008 in தமிழ்ப் பதிவு and My Articles and Religion with no comments

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. இது உண்மையா? இதைப்பற்றி என் கருத்தை கூறுவதற்கு முன் இந்தியா என்பது வெறும் மன்னோ அல்லது மரமோ, செடியோ கொடியோ அல்ல. நான் இந்திய மக்களை நேசிக்கிறேன். இந்தியாவில் பிறந்ததற்காக பெறுமையும் கொள்கிறேன். ஆனால் அதில் வாழும் ஒருசில நபர்கள் இந்தியா இந்துக்களின் நாடு என கூறிக்கொண்டு அதைக் கெடுத்துக்கொண்டு இருப்பதை வேறுக்கிறேன். இந்துத்துவா கொள்கையில் தாங்கள் முனைப்புள்ளவராய் இருந்தால் தயவு செய்து மேற்கோண்டு படிக்க வேண்டாம். தங்களின் உணர்வுகளை நான் மதிப்பது போல் என் உணர்வுகளையும் மதியுங்கள்.

முதலில் இந்தியா இந்துக்களின் நாடு என கூறுபவர்களுக்கு ஒரு செய்தி, இந்தியாவில் இந்து மதம், சைவம் வைணவம் என இரண்டு பெரும் “மதங்களாய்” பிரிந்து கிடந்த போது, அமெரிக்கா, ஐரோப்பா பொன்ற நாடுகளில் கிரிஸ்தவம் பரவுவதற்கு முன்பே இந்தியாவில் கிறிஸ்தவம் இருந்தது. இது வறலாற்று உண்மை. அப்போதிலிருந்து இருந்தாலும் இந்தியாவில் கிறிஸ்தவர்களின் மொத்தம் 2% மட்டுமே. மதமாற்றம் அவர்களின் குறிக்கோளாய் இருந்திருந்தால் இன்னேரம் இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடாகியிருக்கும்.

இந்திய இறையான்மையை காக்க வேண்டும் எனும் போர்வையில் சிலர் செய்துவரும் அறாஜகங்களை உலகம் அறியும்.

நம்நாட்டில் இரண்டு முக்கிய மதத்தினரில் கிரிமினல்களைப் பெருக்கிய இரண்டு தண்டிக்கப்படாத பெருங் குற்றங்கள் 1992-ன் பாபர் மசூதி இடிப்பும், 2002-ன் கோத்ரா எரிப்பு துர்நிகழ்வும். அந்தப் பட்டியலில் சேர்வதற்கு ஒரிஸ்ஸாவும் அஸ்ஸாமும் இப்போது போட்டியிடுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பகிறங்கமாக அனத்து ஊடகங்களிலும் பஜ்ரங்தள் இயக்கம், நாங்கள் தான் செய்தோம் என அறிவித்தும், அக்கட்சியை தடைசெய்ய மத்திய மாநில அரசுகள் தயக்கம் காட்டுவது ஏன்?

என்ன நடக்கிறது இந்த நாட்டில்? கலவரத்தினை, மாநில அரசின் ஆதரவு பெற்ற இயக்கத்தினர் செய்ததாக நம்பப்படும் நிலைமை எப்போது ஏற்பட்டுவிட்டதோ அப்போதே மத்திய அரசு விசாரணைப் பொறுப்பினைத் தன் கையில் எடுத்திருக்க வேண்டாமா? கன்னிகாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதென்பது இந்த மண்ணுக்கே அசிங்கமான விஷயம் இல்லையா? அதற்கு CBI விசாரணை தேவையில்லை என்று மாநில அரசு சொல்கிறது என்றால் அந்த அரசின் விசாரணையில் எந்த வித நேர்மையை எதிர்பார்க்க முடியும்?

1992-ன் பாபர் மசூதியை பி.ஜெ.பி-யே இடித்து விட்டு பாராளுமன்றத்திற்கு சேன்று ஆட்சியை களைத்தது. மதத்தின் பெயரால் அங்கு நடக்கும் படுகொலைகளுக்கு பின்னால் இருப்பது மதம் அல்ல, (பாஜகவின்) அரசியல் என்று “தி டைம்ஸ்” நாளேடு கூறியது.

இப்போது “இந்துத்துவா” எனும் கொள்கையை பரப்பிக்கொண்டிருப்போர் இஸ்லாமியர் அனைவரும் திவிரவாதிகள் எனும் கொள்கையை அனவரிடமும் பறப்பிவிடாயிற்று. இனி இருப்பது கிறிஸ்தவர்கள், அவர்களை மதமாற்ற வேறியற்கள் எனும் மாயையை மறப்பிவிட்டால் அவர்களின் குறிக்கோள் நிறைவுறும்.

தஸ்லிமாவின் மீதான தாக்குதல்களின் போது இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் குலைந்து விட்டது என்று கூக்குரலிட்ட பி.ஜே.பி, மோடி, இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவுகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களது தாக்குதலை நியாயப்படுத்தி “நீ என்ன ஒழுங்கா” என்று பதில் குரல் கொடுக்க ஏதுவாய் அமைந்து விட்டது.

//– வீரன்(Veeran) said…
புனிதர் பதவி அளித்த போது இந்திய கிறிஸ்தவர்களின் பிரச்சினையை போப் அதிக முக்கியத்துவம் குடுத்து எழுப்பியதை கவனிக்க வேண்டுகிறேன் … ‘புனிதர்’ பதவி கொடுக்கும் புனித?! விழாவில் அரசியல் பேசிய அநாகரிகம் தற்செயலாகவா நிகழ்ந்தது? இதற்கு நம் நாட்டு அரசு விழாக்களே மேல் போல. –//

முதலில் ஒன்றை புறிந்துகொள்ளுங்கள், கிறிஸ்தவம் ஒரு மதமே அல்ல. அது ஒரு சமூக வாழ்கை முறை. ஒரு தனிபட்ட மனிதனாக ஒருவனால் கிறிஸ்தவனாக வாழ முடியாது. மற்ற ‘மதங்களுக்கும்’ கிறிஸ்தவத்திற்கும் இது தான் முக்கியமான வித்தியாசம். ஒரு சமுக அமைப்பின் தலைவர், அந்த சமுகத்திற்கு எதிறாக செய்யப்படும் அநீதிகளுக்கு, ஆறுதல் சொல்வது எந்த வகையில் தவறாகும்? இது எந்த விதத்தில் அநாகரிகம் ஆகும்? மேலும் போப், “உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்” என்றுமட்டும் தான் கூறினாறே தவிற மற்ற எதுவும் கூறவில்லை. இது உங்களுக்கு அதிக முக்கியதுவமா?

மீண்டும் கூறுகிறேன் “கிறிஸ்தவம் ஒரு மதமே அல்ல. அது ஒரு சமூக வாழ்கை முறை.” சமூகத்தில் (கிறிஸ்தவ சமூகத்திற்கு மட்டும் அல்ல மொத்த சமூகத்திற்கும் கூட) இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குறல் கொடுக்காதவன் கிறிஸ்தவனே அல்ல. (For those who know: Refer 2nd Vatican council documents)

இப்போது அமைதியாயிருக்கும் இந்த தீவிரவாதிகள் தஸ்லீமாவின் அடுத்த புத்தக வெளியீட்டு விழாவிலோ அல்லது இந்தியாவில் ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் போதோ தனது ரத்த வெறியை காண்பிக்கக் கூடும். ரசூலோ, தீபா மேத்தாவோ, தீப்பில் முகமது மீரானோ சில சம்பவங்களை ஆவணங்களாக்க முயற்சிக்கும் போதோ அல்லது அடர்த்தியாய் பனி பொழியும் ஓர் அதிகாலைப் பொழுதிலோ கொலை செய்யப்படலாம். அப்போதும் மத்திய அரசு மௌனமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். பிய்ந்து தொங்குவது இந்தியாவின் மதச்சார்பின்மை எனும் முகமூடியாய் இருக்கும்.

//–இப்பதிவை, கீழ்கண்ட பதிவுகள் எழுத தூண்டின. இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இவற்றையும் பாற்கவும் : கிரிமினல்கள் எந்த மதம்? மற்றும் தஸ்லிமா – மத அடிப்படை வாதத்தின் மற்றும் ஒரு மைல்கல். இவற்றிலிருந்துதான் இப்பதிவிற்கு மேற்கோள்கள் எடுத்துள்ளேன்.//