என் கவிதை (2): அன்பு

written on November 9, 2008 in தமிழ்ப் பதிவு and Love and My Articles with 3 comments

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.(71)
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover’s secret plain.

அன்பு காட்டினால்
குறைவதொன்றும் இல்லை
நிறைவது பெறுபவரின் மனமாகும்

அன்பு காட்டினால்
நீங்கள் நினைக்காத போது
யாருக்கோ, எங்கோ
ஒருவரின்,
நாட்குறிப்பேட்டில்
நீங்கள் முதலிடம்
பெறலாம்

அன்பு காட்ட
மொழி தடையில்லை
இனம் தடையில்லை
மதம் தடையில்லை
மனம் மட்டுமே போதும்

தாஜ்மகால் கட்ட
தேவையில்லை
சிறு புன்னகை
போதும்
உங்கள் அன்பைக் காட்ட

ஒரு அழகான
காலை வேலையில்
ஒரு அன்னியரைப் பார்த்து,
ஏன் உங்கள்
சொந்தங்களைக் கூடப் பார்த்து
ஒரு சிறு புன்னகை
செய்து பாருங்கள்
அப்போது புரியும்
அன்பின் மகத்துவம்

அன்பு
நீங்கள் செய்யும்
சிறந்த முதலீடு

அன்பு
நீங்கள் நினைக்காத
நேரத்தில் பன்மடங்காய்
திரும்ப வரும்

அன்பு
கடவுள் பேசும்
ஒரே மொழி

அன்பை விட
சிறந்த சொல்
தமிழில் இல்லை
தமிழின்
முதலும் கடையும்
உயிரும் மெய்யும்
உயிர் மெய்யும்
சேர்ந்த சொல்
அன்பாகும்

அன்பு செய்து பாருங்கள்
அகிலத்தை வெல்லலாம்

அன்பு செய்து பாருங்கள்
கடவுளைக் காணலாம்

அன்பு செய்து பாருங்கள்
குழந்தையாய் மாறலாம்

அன்பு செய்து பாருங்கள்
நீண்ட நாள் வாழலாம்

அன்பு செய்து பாருங்கள்
ஞாநியராகலாம்

அன்பு செய்து பாருங்கள்
அறிஞனாகலாம்

அன்பு செய்து பாருங்கள்
புனிதனாகலாம்

அன்பு செய்து பாருங்கள்
நினைத்ததை பெறலாம்

அன்பு செய்து பாருங்கள்
உங்களையும் இரசிக்கலாம்

அன்பு செய்து பாருங்கள்
மகிழ்சியாய் இறக்கலாம்

-மாதரசன்