தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா..

written on June 4, 2010 in தமிழ்ப் பதிவு and My Articles with no comments

தமிழனாய் பிறக்க நான் என்ன தவம் செய்தேனோ, தெரியவில்லை. அதிலும் தமிழ் கற்றவர்களுக்கு மகனாய் பிறந்து! தமிழ் அமுது ஊட்டி வளர்க்கப்பட மாதவம் செய்திருக்க வேண்டும்!!

அதுவும் “தமில் ஈஸ் எ நைஸ் லாங்வேஜ்!” – என தமிழை பாராட்ட வேற்று மொழியை கடன் வாங்கும் சந்ததியினருக்கு மத்தியில் …

என் தமிழார் அல்லாத நண்பர்களோடு உரையாடும் போது, அடிகடி விவாதம் புரியும் தலைப்பு “தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததா?” என்பதுவே !!!

என்ன சொன்னாலும் எவனும் கேக்க மாட்டனுங்க. ஏன்னு பாத்தா அவங்க மொழிஎல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து தான் வந்தது!!! அவங்களுக்கு இத ஏத்துகிறது கடினமா இருக்கு. என்ன பண்ண!!! அதுமட்டும் இல்ல அவுங்க பள்ளிகூட புத்தகத்தில், “எல்லா இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது” – அப்படின்னு இருக்காம்.

செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.  – (ஜோர்ஜ் எல்.ஹார்ட்).

மேற்சொன்ன விதியை சம்ஸ்கிருதம் மற்றும் தமிழை தவிர வேறெந்த இந்திய மொழியும் நிறைவு செய்யாது. ஆனாலும் இந்திய அரசால், அரசியல் ஆதாயதிற்காய் தமிழோடு (2005) சேர்த்து தெலுகு (2008) மற்றும் கன்னடத்திற்கும் (2008) செம்மொழி தகுதி வழங்கபட்டிருக்கிறது !! இப்படிப் பட்ட அரசுகள் இருக்கும் வரை தமிழ் முன்னேறின மாதிரிதான்…

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது. – விக்கிப்பீடியா

உன் கற்புக்கு எதிராய் பேசுபவரை எதிர்பதை விட, உன் ( தமிழ்த் )  தாயின்  கற்புக் கெதிறாய் பேசுபவனை (செயல் படுபவனை) முதைலில் எதிர்த்திடு..

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்