குறும்படம்…

written on August 16, 2010 in தமிழ்ப் பதிவு and My Articles and My Life with no comments

நான் பள்ளி நாட்கள்ல தொ.கா (TV) பாத்த மாதிரி எல்லம் இப்ப பாப்பதில்ல. ‘நான் இன்னும் சின்னப்பையன் இல்ல’ அப்படின்னு எனக்கு உணர்த்தும் சில விஷயங்களில இதுவும் ஒன்னு. நேத்து நண்பகளோட சுதந்திர தினத்தை கொண்டாட உணவகதத்திற்கு போனேன். (சத்தியமா அதுக்குதான் போனேன் நம்புங்கப்பா!!) அங்க தொ.கா-ல நிறைய புது படம் பாட்டு போட்டிருந்தங்க. எனக்கு எதுவுமே தெரியல. புது புது முகங்கலா இருந்தது. என்ன சுத்தி இருந்தவனுங்க எல்லம், “இந்தப் படம் நல்லா இருந்துச்சி”, “அந்தப்பாட்டு நல்லா இருந்துச்சி”-ன்னு சொன்னப்ப அழுவுறதா சிரிக்கிறதானே தெரியல. தலைய மட்டும் ஆட்டிக்கிட்டேன். என்ன பண்றது இப்பெல்லாம் சினிமா தான் எல்லாத்தையும் ஆட்டிபடைகுதே. சரி அது என் வைத்தெரிச்சல். அத விடுங்க, எதுக்கு இத சொல்றேன்னா இப்படி இருந்து நான் இழந்ததுல ஒன்னு, கலைஞர் தொலைக்காட்சியின்  ‘நாளைய இயக்குனர்’ தொடர பத்தி தெரிஞ்சுக்காதது தான். நல்ல வேல Youtube இருக்கு.

எனக்கு புடிச்ச படத்த உங்களோட பகிர்ந்துகிறேன். நீங்களும் பாருங்க.

உண்மைய சொல்லனும்னா ..

மிட்டாய் வீடு

எங்க அம்மாவுக்கு புடிச்ச படம்.

உங்களுக்கு புடிச்ச குறும்படம் இருந்தா கீழ உள்ள கருத்துகள் பெட்டியில போடுங்க…